மா.கம்யூ., மாவட்ட குழு கூட்டம்
கடலுார்; மா.கம்யூ., கட்சியின் கடலுார் மாவட்டக் குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி, மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், மருதவாணன், கருப்பையன், ராமச்சந்திரன், சுப்புராயன் பேசினர்.கூட்டத்தில், ராஜேஷ்கண்ணன், மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், ஆளவந்தார், ராஜேந்திரன், பக்கிரான் பங்கேற்றனர்.சிதம்பரம் நகராட்சியில் 850 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. இங்கு வசித்தவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.