உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம்

சுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர், சுப்ரமணியர், பெரியாண்டவர், திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழா கடந்த 28 ம் தேதி காலை கணபதி , நவகிரக, ஹோமங்கள் நடந்தது. மாலை முதல் கால யாக பூஜையும், 29 ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன.கும்பாபிஷேக விழாவான நேற்று, காலை நான்காம் கால யாக பூஜை மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. யாக சாலையில் வைத்து பூஜைக்கப்பட்ட புனித நீர்அடங்கிய கலசங்கள் சிவாச்சாரியார்களால், கோயிலை சுற்றி வலம் வந்து எடுத்துவரப்பட்டு விமான கலசத்தின் மீது கும்ப நீர், கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மூலஸ்தானத்தில் வீற்றிருந்த விநாயகர் ,மற்றும் சுப்பிரமணியர்க்கு மகா அபிஷேகமும் நடந்தது. .திருச்செந்தூர் முருகன் வார வழிபாட்டு மன்றம் சார்பில் வெள்ளி வேல் கோவில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை