உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி முதன்மை திட்ட மேலாளர் ஆய்வு

ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி முதன்மை திட்ட மேலாளர் ஆய்வு

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை, முதன்மை திட்ட மேலாளர் ஆய்வு செய்தார்.இந்தியன் ரயில்வே நிர்வாகம் சார்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் 8 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் அலங்கார வளைவு, முகப்பு, நவீன டிக்கெட் கவுன்டர், பயணிகள் காத்திருப்பு கூடம், நடைமேடைகளில் மேற்கூரை, குடிநீர், கழிவறை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.இப்பணிகளை, ரயில்வே முதன்மை திட்ட மேலாளர் ராஜராஜன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உதவி செயற்பொறியாளர் கஜூஷக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை