மேலும் செய்திகள்
அருணாச்சலா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
11-May-2025
புவனகிரி: புவனகிரி மங்களம் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. புவனகிரி மங்களம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 88 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சியை தக்க வைத்துள்ளனர். மாணவர்கள் சிவபாரதி 493, கபின்ராஜ் 492, சாய்குமரன் 492, கிருபாநிதி 491, கௌசிக் 490, மிதுன் 489, ஸ்ரீராம் 489, மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முறையே முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் தமிழ்மணி, செயலர் அங்கையற்கண்ணி, அறக்கட்டளை தலைவர் கண்மணி, இயக்குனர் ரத்னா நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.
11-May-2025