மேலும் செய்திகள்
முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை மனு அளிப்பு
02-Mar-2025
கடலுார்: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான புற்றுநோய், பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு மருத்துவ முகாம் நாளை கடலுார் அரசு மருத்துவமனை கூட்டரங்கில் நடக்கிறது.சுகாதாரம் மற்றும் குடும்பநலன் இணை இயக்குனரால் நடத்தப்படும் இம்முகாம் நாளை 20ம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக் கிறது. முகாமில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந் தோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், உடல் ஊனமுற்ற முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்கள் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் சக்கர நாற்காலி மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட பிரத்தி யேக பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று பயன்பெற மருத்துவ முகாமில் நேரில் கலந்து கொண்டு விண்ணப் பிக்கலாம்.மேலும் விபரங்களுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.
02-Mar-2025