உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாத பவுர்ணமியொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு குயவர் வீதி வேழ விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்தனர். பின், அம்மனுக்கு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி