ரூ.4.64 கோடி திட்ட பணிகள் அமைச்சர் கணேசன் அடிக்கல்
கடலுார் : திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 10 முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார். திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 4.16 கோடி ரூபாய் மதிப்பில் 10 முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, 4.64 கோடி ரூபாய் மதிப்பிலான 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் கணேசன், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகையில், 'ராமநத்தம் அரசு உயர்நிலை பள்ளி, கழுதுார் மற்றும் கோவிலுார் அரசு மேல்நிலை பள்ளி, மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, ஆலடி அரசு மேல்நிலை பள்ளி, எருமனுார் அரசு உயர்நிலை பள்ளி, முகாசபரூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 38 லட்சம் ரூபாய் மதிப்பிலும், திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் 90 லட்சம் ரூபாய் மதிப்பிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கீழக்கல்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் 98.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது' என்றார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) சிவசங்கரநாயகி, நகராட்சி சேர்மன் வெண்ணிலா, துணை சேர்மன் பரமகுரு உட்பட பலர் பங்கேற்றனர்.