உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குடிநீரில் கழிவுநீர் கலப்பு: நோய் பரவும் அபாயம்

 குடிநீரில் கழிவுநீர் கலப்பு: நோய் பரவும் அபாயம்

நெல்லிக்குப்பம்: குடிநீரில் கழிவு நீர் கலந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில், ஆழ்துளை கிணறு அமைத்து, நகரம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யும் பணி துவங்கி உள்ளது. இதற்காக, முதல் கட்டமாக அங்கிருந்து, 3 கி.மீ., துாரம் குழாய் புதைக்கும் பணி நடந்தது. அப்போது, திருக்கண்டேஸ்வரம் மாரியம்மன் கோவில் அருகே தற்போதைய குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால், 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் உடைந்த குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். உடைந்த குழாயை சரி செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை