உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., நிறுவனத்திற்கு எம்.எல்.ஏ., கண்டனம்

என்.எல்.சி., நிறுவனத்திற்கு எம்.எல்.ஏ., கண்டனம்

விருத்தாசலம்: என்.எல்.சி., தொழிற் பயிற்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என, அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் கேட்டுக்கொண்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;என்.எல்.சி., நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த ஐ.டி.ஐ., படித்த 262 பேர், தொழில்துறை பயிற்சியாளர் பணிக்கு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின், அவர்களுக்கு கடந்த 19ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. அதன் தொடர்ச்சியாக வரும் 3ம் தேதி நடக்கும் எழுத்துத்தேர்வுக்கான கடிதத்தை, என்.எல்.சி., நிறுவனம் அனுப்பி உள்ளது.இதில், நுாற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை. இந்த செயல் கண்டிக்கத்தக்கது.நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பயிற்சி முடித்து 13 ஆண்டுகள் காத்திருந்து, தற்போது கிடைத்துள்ள வாய்ப்பில் எழுத்துத்தேர்வு எழுத அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது. நிலம் கொடுத்த விவசாயிகள் மீது என்.எல்.சி., நிறுவனத்திற்கு அக்கறை இல்லை என்பதை இந்த செயல் மீண்டும் நிரூபித்துள்ளது.எனவே, என்.எல்.சி., நிறுவனம் வரும் 3ம் தேதி நடக்கும் எழுத்துத்தேர்வை ஒத்தி வைத்து, அனைவருக்கும் கடிதம் அனுப்பி மற்றொரு தேதியில் எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை