உள்ளூர் செய்திகள்

மொபட் திருட்டு

வடலுார் : மொபட் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.வடலூர், தென்குத்து, புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 47; இவர் வடலுார் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பேட்டரி கடைக்கு மொபட்டில் சென்றார். கடையின் வெளியே வாகனத்தை நிறுத்திய ராஜேந்திரனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.அவருக்கு உதவுவது போல் வந்த மர்ம ஆசாமி, ராஜேந்திரனின் பாக்கெட்டில் வைத்திருந்த சாவியை எடுத்து மொபட்டை திருடி சென்றார். வடலுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ