மேலும் செய்திகள்
பனைமரம் விழுந்து பசு மாடு பலி
22-Oct-2025
புதுச்சத்திரம்: கனமழை காரணமாக ஓட்டு வீட்டின், சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தனர். கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார் முள்ளிப்பள்ளத்தை சேர்ந்தவர் அசோதை, 69, இவரது மகள் ஜெயா, 40; விவசாய கூலி தொழிலாளிகள். இருவரும் நேற்று காலை, 10.30 மணியளவில் வீட்டிலிருந்தபோது, கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய அசோதை சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஜெயாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Oct-2025