உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் - எருமனுார் புறவழிச்சாலை உள்வாங்கியதால், வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம் - எருமனுார் புறவழிச்சாலை உள்வாங்கியதால், வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம்: உள்வாங்கியுள்ள விருத்தாசலம் - எருமனுார் புறவழிச்சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் - எருமனுார் புறவழிச்சாலை வழியாக பஸ், லாரி, வேன், டேம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், 3கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை முழுவதும் ஆங்காங்கே உள்வாங்கியுள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்து ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படுவதால், தினசரி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர்.எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, உள்வாங்கியுள்ள விருத்தாசலம் - எருமனுார் புறவழிச்சாலையை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை