உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அபுதாபியில் இறந்த நபரின் குடும்பத்துக்கு எம்.பி., ஆறுதல்

அபுதாபியில் இறந்த நபரின் குடும்பத்துக்கு எம்.பி., ஆறுதல்

விருத்தாசலம்: அபுதாபியில் இறந்த விருத்தாசலம் நபரின் குடும்பத்துக்கு விஷ்ணு பிரசாத் எம்.பி., ஆறுதல் கூறினார். விருத்தாசலம், ஆலடிரோடு, சம்சுதீன் மகன் ரோஷன் அலி, 47; அபுதாபியில் ரெஸ்டாரன்டில் பணிபுரிந்த இவர், கடந்த 3ம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தார். தனது கணவரின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு மனைவி பவுஷியா பேகம் கோரிக்கை விடுத்தார். அதன்படி, விஷ்ணு பிரசாத் எம்.பி., வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மனு கொடுத்தார். இன்று ரோஷன் அலி உடல், சொந்த ஊரான விருத்தாசலத்திற்குகு வர உள்ளது. இதையடுத்து, ரோஷன் அலி வீட்டிற்கு நேற்று சென்ற விஷ்ணு பிரசாத் எம்.பி., அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சேலம் கோட்ட ரயில்வே கமிட்டி உறுப்பினர் மணிகண்டன், ஐ.என்.டி.சி., மாவட்ட தலைவர் சந்திரசேகர், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராம்குமார், மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை