உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் நகராட்சி நடவடிக்கை

 சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் நகராட்சி நடவடிக்கை

சிதம்பரம்: சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சிறை பிடித்தனர். சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளில், தொடர்ந்து கால்நடைகள் அதிகளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்து வந்தனர் இந்நிலையில், கமிஷ்னர் மல்லிகா, சுகாதார ஆய்வாளர் முருகேசன் தலைமையில், நேற்று சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் அதிரடியாக சிறை பிடிக்கப்பட்டன. நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் திரிந்த, 27 மாடுகளை பிடித்து, நகராட்சி வளாகத்தில் கட்டி போட்டனர். அதனை தொடர்ந்து, பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்துதோடு, சாலையில் மாடுகளை விடக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்