உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரூராட்சியை மேம்படுத்துவதே எனது லட்சியம்: கெங்கைகொண்டான் சேர்மன் திட்டவட்டம்

பேரூராட்சியை மேம்படுத்துவதே எனது லட்சியம்: கெங்கைகொண்டான் சேர்மன் திட்டவட்டம்

மந்தாரக்குப்பம் : 'கெங்கைகொண்டான் பேரூராட்சியை மேம்படுத்துவதே எனது லட்சியம்' என கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தெரிவித்துள்ளார்.தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி கெங்கைகொண்டான் பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கும் மற்றும் எலக்ட்ரிக் தகன மேடை அமைப்பதற்கும் என்.எல்.சி., அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க அமைச்சர் மற்றும் என்,எல்,சி., அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அரசால் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, விதவைப் பெண்கள் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மாநில அரசின் சலுகைகைள், மருத்துவ காப்பீடு, கல்வி உதவித் தொகை, உள்ளிட்டவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.பிறப்பு, இருப்பிடம், ஜாதிச் சான்றிதழ், பட்டா உள்ளிட்டவைகள் அனைத்தும் சுலபமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கவும், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.வார்டுகளில் அனைத்து தெருக்களிலும் மின்விளக்கு, சாலை வசதி. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வேளாண்மைத் துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கெங்கைகொண்டான் பேரூராட்சியை மேம்படுத்துவதே எனது லட்சியம்.இவ்வாறு கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை