உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை வசதி கேட்டு நன்னிக்குப்பம் மக்கள் மனு

சாலை வசதி கேட்டு நன்னிக்குப்பம் மக்கள் மனு

கடலுார்; சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.பண்ருட்டி அடுத்த நன்னிக்குப்பம் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;எங்கள் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் சாலை போடவில்லை. இதனால் ஊருக்குள் கனரக வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது. சாலை வசதி இல்லாத காரணத்தால் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் கிராம சபா கூட்டத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை