உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேசிய சிலம்பம் போட்டி: சிதம்பரம் மாணவர்கள் வெற்றி

தேசிய சிலம்பம் போட்டி: சிதம்பரம் மாணவர்கள் வெற்றி

சிதம்பரம்; தமிழ்நாடு டி.எம்.ஏ., இண்டர்நேஷ்னல் சிலம்பம் அண்டு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில், தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, கொடைக்கானலில் நடத்தப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 600 சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர்.போட்டியில், சிதம்பரம் எம்.ஜி.ஆர்., சிலம்ப பயிற்சி பள்ளியில் இருந்து, பயிற்சியாளர் உத்ராபதி தலைமையில் 14 மாணவர்கள் பங்கேற்று, 26 போட்டிகளில் மோதினர். இதில் 20 போட்டிகளில் முதலிடம், 6 போட்டிகளில் இரண்டாமிடமும் பெற்ற சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற சிலம்ப மாணவர்களுக்கு சிதம்பரத்தில் பாராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி