உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., ஊழியர் தற்கொலை

என்.எல்.சி., ஊழியர் தற்கொலை

நெய்வேலி : என்.எல்.சி., ஊழியர் துாக்குப் போட்டு தற் கொ லை செய்து கொண்டார் . நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 12ஐ சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்,56; என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலைய ஊழியர். கடந்த மூன்று நாட்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அவர் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண் பர் அருணாச்சலம் என்ற சக என்.எல்.சி., நிரந்தர தொழிலாளிக்கு தனியார் நிதி நிறுவனத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனுக்கு ஆரோக்கியதாஸ் ஜாமின் கையெழுத்திட்டார். அருணாச்சலம் கடந்தாண்டு இறந்த நிலையில், தனியார் நிதி நிறுவனம் ஆரோக்கியதாசின் ஊதியத்தில் 27 ஆயிரம் ரூபாய் பணம் பிடித்தம் செய்தது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு ஆரோக்கியதாஸ் இறந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை