உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.8 ஆயிரம் கோடி ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை: சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்

ரூ.8 ஆயிரம் கோடி ஈட்டி என்.எல்.சி., புதிய சாதனை: சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தகவல்

நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டில், ரூ. 8,004 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. என்.எல்.சி., இந்தியா நிறுவன சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் நடந்த நிதிநிலை குறித்த கூட்டத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக்கான நிதி நிலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதுகுறித்து சேர்மன் கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டில் நிலக்கரி உற்பத்தி 74.87 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது, மின்உற்பத்தியை பொறுத்தவரை, 6 மாதங்களில் மொத்த மின் உற்பத்தி 13,375. 87 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. இதில் 1,126.53 மில்லியன் யூனிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியும் அடங்கும். நடப்பு நிதியாண்டில், செயல்பாடுகளின் மூலம் கிடைத்த அரையாண்டு வருவாய் ரூ. 8,004 கோடியாக உயர்ந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ. 1,564 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனீட்டு நீக்கத்திற்கு முந்தைய வருமானம் ரூ. 3,190 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில், கடந்த செப்., 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டு நிலவரப்படி என்.எல்.சி., குழுமத்தின் நிகர மதிப்பு ரூ. 19,965.62 கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ