உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்த பிரபல ரவுடிக்கு எலும்பு முறிவு

போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்த பிரபல ரவுடிக்கு எலும்பு முறிவு

கடலுார், : போலீசுக்கு பயந்து ஏரியில் குதித்த பிரபல ரவுடியின் கை, கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகன் ராஜ்குமார்,31; பிரபல ரவுடி. இவர் மீது கொலை, வழிப்பறி மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நெய்வேலி டவுன்ஷிப் மற்றும் தர்மல் போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளது.இந்நிலையில் இவர் புதுச்சேரி கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 5ம் தேதி இரவு கண்டமங்கலத்தில், விழுப்புத்தை சேர்ந்த செல்வம் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.அதனை அறிந்த கடலுார் மாவட்ட எஸ்.பி., ராஜாராம், ரவுடி ராஜ்குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான டெல்டா போலீசார், நேற்று முன்தினம் இரவு நெய்வேலி சாம்பல் ஏரி அருகே பதுங்கியிருந்த ராஜ்குமாரை சுற்றி வளைத்தனர்.போலீசாரை கண்ட ராஜ்குமார், ஏரியில் குதித்து தப்பிக்க முயன்றதில், அவரது வலது கை மற்றும் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த போலீசார், அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ