உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சத்துணவு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

கடலுார் : தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில செயலாளர் குணா தலைமை தாங்கினார். ராஜேந்திரன், நடராஜன், பரமசிவம் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் மணிதேவன் வரவேற்றார். மாநில சிறப்புத் தலைவர் சீனிவாசன் துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாநில பொதுச் செயலாளர் தெய்வசிகாமணி, துணைத் தலைவர் ஞானஜோதி, மாநில செயலாளர் உதயகுமார் விளக்க உரையாற்றினர். அரசுப் பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி, மாவட்டத் தலைவர் இருதயராஜ் வாழ்த்திப் பேசினர். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ