உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

 மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

கடலுார்: பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம், ராமநத்தம் பழைய ரோட்டைச் சேர்ந்தவர் தங்கம், 60; பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த, 22ம் தேதி அதிகாலை 4:45 மணிக்கு கடையை திறந்தார். அப் போது அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் சிகரெட் கேட்டனர். அப்போது, சிகரெட் இல்லை என தங்கம் கூறினார். உடனே அந்த மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி மூதாட்டியின் அணிந்திருந்த, 5 கிராம் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரி பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ராமநத்தம் போலீஸ்நிலையம் அருகிலேயே நடந்த இந்த துணிகர சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ