மேலும் செய்திகள்
இயந்திரம் திருடிய 3 பேர் கைது
13-Oct-2025
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே பாலினம் கண்டறியும் இயந்திரம் வைத்திருந்த புகாரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடியில் பிறக்கும் குழந்தை பாலினம் கண்டறியும் இயந்திரம் இயந்திரம் வைத்திருப்பதாக மாவட்ட மருத்துவக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சோதனையில், மாவட்ட இணை இயக்குனர் மணிமேகலை தலைமையிலான குழு, சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் வீட்டில் கருக்கலைப்பு இயந்திரம் இருப்பது கண்டறிந்து, பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். அதில் சிறுபாக்கம் அடுத்த கச்சிமயிலூரைச் சேர்ந்த முருகன், 55; ஆவட்டி அடுத்த மா.புடையூரைச் சேர்ந்த தென்னரசு, 32; சிறுபாக்கம் அடுத்த அசகளத்தூரைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், 40; ராஜா, 36; ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து சிறுபாக்கம் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில் அசகளத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவரை, கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.
13-Oct-2025