உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பாவா மரைக்காயர் பூங்கா திறப்பு விழா

 பாவா மரைக்காயர் பூங்கா திறப்பு விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், 15 லட்சம் செலவில் அமைக் கப்பட்ட பாவா மரைக்காயர் பூங்காவை நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பரங்கிப்பேட்டை கும்மத் தெருவில், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பாவா மரைக்காயர் பூங்கா அமைக்கப்பட்டது. அதற்கான, திறப்பு விழா நேற்று நடந்தது. பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், நகர ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம் முன்னிலை வகித்தனர். பாவா மரைக்காயர் பூங்காவை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். விழாவில், நகர அவைத் தலைவர் மலைமோகன், நிர்வாகிகள் ஷாஜாஹான், மூர்த்தி, கலைவாணன், காமில், யஹாயா மரைக்காயர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ