| ADDED : நவ 26, 2025 07:48 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும்போது, 13 லட்சத்து 56 ஆயிரத்து 705 ரூபாய் காணிக்கை இருந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள 8 நிரந்தர உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி, இந்து சமய அறநிலையத்துறை கடலுார் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் நேற்று பகல் 11:00 மணிக்கு நடந்தது. அதில், 13 லட்சத்து 56 ஆயிரத்து 705 ரூபாய் ரொக்கம், 7.250 கிராம் தங்கம், 335 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. கோவில் செயல் அலுவலர் பழனியம்மாள், ஆய்வாளர் பிரேமா, மேலாளர் செல்வக்குமாரி உட்பட கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர். வங்கி பணியாளர்கள், தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேபோல், கடந்த செப்டம்பரில், உண்டியல் திறப்பின்போது, 17லட்சத்து, 32 ஆயிரத்து, 451 லட்சம் ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.