மேலும் செய்திகள்
உளுந்து அறுவடை பணி: தொழிலாளர்கள் தீவிரம்
19-Jan-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து செடிகளை அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விருத்தாசலம் அடுத்த மணலுார், மணவாளநல்லுார், எருமனுார், சின்னவடவாடி, பரவளூர், தொரவளூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம்.அதேபோல், நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையை நம்பி, மானாவாரியாக உளுந்து சாகுபடி செய்திருந்தனர்.தற்போது, செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக உளுந்து அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
19-Jan-2025