உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பல லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை :பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை

 பல லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை :பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை

மந்தாரக்குப்பம்: பயணியர் நிழற்குடையில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை எழுந்துள்ளது. என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்கு, மந்தாரக்குப் பம் பழைய பஸ் நிலையம் அகற்றப்பட்டு வடக்குவெள்ளுர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மந்தாரக்குப்பம் பழைய பஸ் நிலையம் முன்புள்ள கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை யில், புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா சில மாதங்களுக்கு முன் நடந்தது. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது இப்பகுதியில் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை