உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி

பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி

கடலுார் : கடலுார் தென்பெண்ணை ஆற்றில், ரத சப்தமியை முன்னிட்டு பாடலீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ரத சப்தமியை முன்னிட்டு பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். நேற்று ரத சப்தமியை முன்னிட்டு பாடலீஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, மனோன்மணி அம்பிகா சமேத சந்திரசேகரர் பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பாடலீஸ்வரர் எழுந்தருளி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆறு கொம்மத்தாமேடு தரைப்பாலத்தில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிேஷகம், தீராபாரதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !