உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெட்ரோல் பங்க் சேதம்: ஊழியருக்கு வலை

பெட்ரோல் பங்க் சேதம்: ஊழியருக்கு வலை

திட்டக்குடி: திட்டக்குடி, மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் இளவழகன், 70; இவரது பெட்ரோல் பங்கில், தி.இளமங்கலம் நித்தியானந்தம், 28; என்பவர், 2 ஆண்டுகளாக சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 7:00 மணியளவில், பெட்ரோல் பங்கிற்கு குடிபோதையில் வந்த அவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் இளவழகனிடம் மொபைலில் தொடர்பு கொண்டு விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தம் பெட்ரோல் பங்கில் இருந்த கம்பியால் அலுவலக அறை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். மேலும், அங்கிருந்த பைக் ஒன்றையும் சேதப்படுத்தி உள்ளார். புகாரின்பேரில் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் தப்பியோடிய நித்தியானந்தத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை