நடராஜர் கோவிலில் உழவார பணி
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 400 சிவனடியார்கள் பங்கேற்று உழவார பணியில் ஈடுபட்டுள்ளனர். உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வரும் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் ஜன., 2ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், துாத்துக்குடி, எட்டயபுரம், சுரைக்காய்பட்டி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 சிவனடியார்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் முழுவதும் குப்பைகள், புல், செடிகள் அனைத்தையும் அகற்றி கோவிலை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.