மேலும் செய்திகள்
நியமனம்
07-Jul-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். உழவர் பேரியக்க மாநில துணை தலைவர் சங்கர நாராயணன், செல்லபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் மணியரசன், வடிவேல் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாக ஜெய்சங்கர் வரவேற்றார். மாநில உழவர் பேரியக்க தலைவர் தேவதாஸ் படையாண்டவர் பேசினார். பூம்புகாரில் பா.ம.க., தலைவர் ராமதாஸ் தலைமையில் நடக்கும் மகளிர் மாநாட்டில் திரளாக பங்கேற்பது. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை கிராமங்கள் தோறும் கொடுத்து பெண்களை மாநாட்டிற்கு அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
07-Jul-2025