உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது போக்சோ

சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது போக்சோ

பண்ருட்டி: பண்ருட்டி அருகே சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் பண்ருட்டி மகளிர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதிஷ்,28; இவர் இதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, கடந்த ஏப்., 4ம் தேதி சிறுவத்துார் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் திருவதிகை எடப்பாளையம் பகுதியில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதில் 17 வயது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இதுகுறித்து பண்ருட்டி ஊர்நல அலுவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் சதிஷ் மீது போக்சோ, சிறுமி திருமண தடை சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை