உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் மீது போக்சோ

வாலிபர் மீது போக்சோ

குள்ளஞ்சாவடி : குழந்தை திருமணம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் சஞ்சய்,21; இவருக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. சிறுமி கர்ப்பமான நிலையில் கடலுார் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். குழந்தை திருமணம் குறித்து விரிவாக்க அலுவலர் ராஜரீகமேரி குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சஞ்சய் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை