மேலும் செய்திகள்
ஏ.டி.எம்., உடைத்து கொள்ளை முயற்சி
25-Dec-2024
கடலுார்; கடலுார் சாவடியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. கடந்த டிச., 24ம் தேதி, ஏ.டி.எம்., மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. கடலுார் புதுநகர் போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர் சம்மட்டி கொண்டு ஏ.டி.எம்., மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.இயைதடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். இவ்வழக்கில் குற்றவாளியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சம்பவம் நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும், இதுவரை குற்றவாளி குறித்து போலீசாருக்கு துப்பு ஏதும் கிடைக்காமல், திணறி வருகின்றனர்.
25-Dec-2024