உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வயல் வெளியில் சடலம் போலீஸ் விசாரணை

 வயல் வெளியில் சடலம் போலீஸ் விசாரணை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே வயல் வெளியில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். வான்பாக்கத்தை சேர்ந்தவர் ராமு. இவர் நேற்று காலை தனது நெல் வயலுக்கு சென்றார். அப்போது அங்கு ரத்த காயங்களுடன் வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். நெல்லிக்குப்பம், போலீசார் விசாரணையில் இறந்தவர், பண்ருட்டி அடுத்த நடுசாத்திபட்டை சேர்ந்த தெய்வநாயகம் மகன் ஜான்பீட்டர், 38; விவசாயி; என தெரிந்தது. அவரது சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், ஜான்பீட்டரின் அண்ணன் சேவியர் கொடுத்த புகாரில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து கூறியதாவது: இறந்த ஜான்பீட்டர் தலையில் ரத்த காயம் உள்ளது. அவருடன் மது அருந்த வந்த சாத்திப்பட்டை சேர்ந்த ரமேஷ் என்பவரை விசாரிக்கிறோம். இருவரும் மது அருந்திவிட்டு வரும்போது ஒரு பாட்டில் வாங்கி வந்துள்ளனர். போலீஸ் சோதனை சாவடி இருப்பதால் ரமேஷ் பைக்கில் வந்துள்ளார். ஜான்பீட்டர் ஆற்றில் நடந்து வருவதாக கூறியுள்ளார். போலீஸ் செக்போஸ்ட்டை கடந்து வந்து நீண்ட நேரம் காத்திருந்தும் ஜான்பீட்டர் வராததால் கிளம்பி சென்று விட்டதாக ரமேஷ் கூறினார். ஆனால் ரமேஷ் மொபைல் போன் பல மணி நேரம் அந்த இடத்திலேயே இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. ரமேஷ் யாருடன் பேசினார் என விசாரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ