மேலும் செய்திகள்
மாணவி மாயம் தந்தை புகார்
25-Dec-2024
கடலுார் : கடலுார் அருகே இளம்பெண் சாவில் சந்தேகம் உள்ளதாக, தந்தை அளித்த புகாரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் அடுத்த பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்,49. இவரது மகள் ஷீலா,20. புதுச்சேரி தனியார் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பிசியோதெரபி படித்துவந்தார். இவர் அதே ஊரைச் சேர்ந்த முகேஷ் என்பவரை காதலித்து, ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். கடந்த நான்கு மாதங்களாக ஷீலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு முகேஷ் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று காலை 9 மணிக்கு ஷீலா கணவரது வீட்டிலேயே புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிவக்குமாருக்கு தகவல் தெரிந்தது. தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவர் அளித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Dec-2024