உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் மாயம் போலீஸ் விசாரணை

பெண் மாயம் போலீஸ் விசாரணை

குள்ளஞ்சாவடி: பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குள்ளஞ்சாவடி அடுத்த பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகள் மங்க லட்சுமி, 24; நேற்று முன்தினம் காலை இவரது குடும்பத்தினர் இவரை வீட்டில் விட்டுவிட்டு, உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்த போது, மங்கலட்சுமி மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ