உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குளம் துார்வாரும் பணி

குளம் துார்வாரும் பணி

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் குளம் 'தினமலர்' செய்தி எதிரொலியாக துார்வாரும் பணி நடந்து வருகிறது.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ஊராட்சியில் கடலுார் - பண்ருட்டி சாலையையொட்டி ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. குளத்தில் ஆகாயதாமரை செடிகள் வளர்ந்து குளம் முழுவதும் பரவி இருந்தது.ஓரு கிலோமீட்டர் துாரத்தில் வரக்கால்பட்டு ஊராட்சிக்கு சொந்தமான குளம் பல லட்சம் செல்வில் துார்வாரப்பட்ட நிலையில், காராமணிக்குப்பம் குளம் துார்வாரவில்லை. இதனால் கடந்த ஆண்டு பெய்த மழையில் குளம் நிரம்பி தற்போதைய கோடையிலும் தண்ணீர் நின்று அழகாக காணப்படுகிறது. காராமணிக்குப்பம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, 7 லட்சம் ரூபாய் செலவில் குளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் துார்வாரும் பணி துவங்கியது.குளத்தை துாய்மை யாக பராமரிப்பதோடு நடைபயிற்சி செல்ல ஏதுவாக சுற்றிலும் நடை பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை