உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மாணவியர் விடுதிகளில் பொங்கல் பண்டிகை போட்டி

அரசு மாணவியர் விடுதிகளில் பொங்கல் பண்டிகை போட்டி

கடலுார்; கடலுார் தேவனாம்பட்டினம் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தது.விடுதி காப்பாளினி சுமதி தலைமை தாங்கினார். இதில், மாணவியருக்கு இலக்கியப்போட்டி, விளையாட்டு போட்டி, கோலப் போட்டி, பாட்டுப்போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாணவியருக்கு அரசு பெரியார் கலைக்கல்லுாரி துணை முதல்வர் சாந்தி பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக மாணவியர் பொங்கல் வைத்து கொண்டாடினர்.அப்போது, கல்லுாரி இணை பேராசிரியைகள் கீதா, பத்மினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோன்று, செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ., பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியிலும் மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அரசு பெண்கள் ஐ.டி.ஐ., முதல்வர் ஆதவ புருேஷாத் சிறப்புரையாற்றி, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது, உதவி பயிற்சி அலுவலர்கள் ரேணுகா, சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை