மேலும் செய்திகள்
கோரிக்கை அட்டை அணிந்து அஞ்சல் ஊழியர்கள் பணி
14-Aug-2025
அஞ்சல் சேவையில் ஈடுபட வரவேற்பு
24-Aug-2025
கடலுார்: அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றத்தின் கூட்டம், வரும் 17ம் தேதி அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இது குறித்து அஞ்சலங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வரும் 17ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு கடலுார், வண்ணாரப்பாளையம், கடற்கரை சாலையில் உள்ள அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இக் கூட்டத்தில் கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும். இம்மன்றத்தின் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார் என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு எழுதி அனுப்பும்படி இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
14-Aug-2025
24-Aug-2025