உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்டர் மீடியன்களில் போஸ்டர்: அரசியல் கட்சியினர் அடாவடி

சென்டர் மீடியன்களில் போஸ்டர்: அரசியல் கட்சியினர் அடாவடி

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சாலையில் உள்ள சென்டர் மீடியன்களில் அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டுவதால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு விபத்தில் சிக்குகின்றனர். விருத்தாசலத்தில் உள்ள கடலுார் சாலை, சேலம் சாலை, கடைவீதி, பாலக்கரை, பெரியார் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை துறை சார்பில், சாலையின் நடுவே சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனால், அந்த பகுதியில் விபத்து குறைந்துள்ளது. இந்நிலையில், சமீப காலமாக, விருத்தாசலத்தில் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன்களின் இருபுறமும் போஸ்டர் ஒட்டும் கலாசாரம் அதிகரித்துள்ளது.முதலில், அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டினர். அதைத்தொடர்ந்து, காலமானார், போராட்டம், ஆர்ப்பாட்டம், நினைவஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்து என அனைத்து தரப்பினரும் சென்டர் மீடியன்களில் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சென்டர் மீடியன்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை பார்த்து கவனசிதறல் ஏற்பட்டு அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.மேலும், அவ்வப்போது, சென்டர் மீடியன்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கிழித்து சுத்தம் செய்தாலும், மீண்டும் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.எனவே, சென்டர் மீடியன்களில் போஸ்டர் ஒட்டும் நபர்கள் மீது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், நகரின் அழகை சிதைக்காத வண்ணம் போஸ்டர் ஒட்டுபவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி