உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிற்சாலையில் துாய்மை பணி சீல் வைப்பது ஒத்திவைப்பு

தொழிற்சாலையில் துாய்மை பணி சீல் வைப்பது ஒத்திவைப்பு

கடலுார்: கடலுார் சிப்காட் விபத்து நடந்த தொழிற்சாலையில் துாய்மை பணி நடப்பதால், 'சீல்' வைப்பது ஒத்தி வைக்கப்பட்டது. கடலுார், சிப்காட்டில் உள்ள லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் ரசாயன கழிவு நீர் தொட்டி வெப்பம் காரணமாக வெடித்தது. இதனால், அருகில் உள்ள பகுதிகளில் 30 க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர்.அதனைத் தொடர்ந்து தொழிற்சாலையை மூடி 'சீல்' வைக்க தாசில்தார் மகேஷ் தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனர்.அப்போது தொழிற்சாலையில், ஆபத்தை விளைவிக்கும் ஆசிட், ரசாயனங்களை துாய்மைபடுத்தி பின் 'சீல்' வைக்குமாறு, தொழிற்சாலை நிர்வாகம், அதிகாரிகளை கேட்டுக்கொண்டது. அதனை ஏற்று அதிகாரிகள் தொழிற்சாலையை சுத்தம் செய்ய கால அவகாசம் வழங்கினர். துாய்மை பணி முடிந்த பின் 'சீல்' வைக்கப்படும் என தாசில்தார் மகேஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை