அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு
திட்டக்குடி: மண்டல அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வென்ற திட்டக்குடி கல்லுாரி மாணவர்களை முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர். மணடல அளவிலான டேக்வாண்டோ போட்டி, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் நடந்தது. இதில், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், கடலுார் மாவட்டம், திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். அதில், பெண்கள் பிரிவில் பங்கேற்ற மாணவிகள் பவதாரணி தங்கமும், கனிமொழி, சசிகலா, பிரிதிகா, உதயா ஆகியோர் வெண்கல பதக்கமும், நிர்மலா வெள்ளி பதக்கமும் வென்று முதலிடம் பிடித்தனர்.ஆண்கள் பிரிவில் பங்கேற்ற மாணவர்கள் ஜான்ஜெயகுமார் தங்க பதக்கமும், கிரிஹரன், சக்திபிரியன் வெள்ளியும், வேல்முருகன், அருள்குமார் வெண்கலப் பதக்கம் வென்று இரண்டாமிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.