உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடுப்பு கட்டை கட்ட நடவடிக்கை தேவை

தடுப்பு கட்டை கட்ட நடவடிக்கை தேவை

புதுச்சத்திரம்: மேலவாய்க்கால் ஷட்டரில் தடுப்புக் கட்டை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சத்திரம் அடுத்த வயலாமூர்-பெரியகுமட்டி செல்லும் சாலையின் குறுக்கே, மானம்பார்த்தான் மேலவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் நீரை பயன்படுத்தி, இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மேலவாய்க்கால் ஷட்டர் பாலத்தின் ஒரு பகுதியில், பக்கவாட்டு தடுப்பு கட்டை உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், தடுமாறி வாய்க்காலில் விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில்கொண்டு, ஷட்டர் பாலத்தில் சேதமடைந்துள்ள, பக்கவாட்டு தடுப்பு கட்டையை கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை