மேலும் செய்திகள்
நிலத்தகராறு வாலிபர் மீது வழக்கு
09-Sep-2025
விருத்தாசலம் : முன்விரோதம் காரணமாக தாக்கி கொண்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் அடுத்த பெரம்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 42; இவருக்கும் விருத்தாசலம் கம்பர் தெருவைச் சேர்ந்த கணேசன் மகள் ஆனந்தி, 40; என்பவருக்கும் இடையே, பெரம்பலுார் ஏரியில் மீன் பிடிக்கும் தொழிலில் முன்விரோதம் உள்ளது. கடந்த 17 ம் தேதி இவர்களுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், இருவரும் ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டனர். இருதரப்பு புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார், கதிர்வேல், ஆனந்தி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Sep-2025