மேலும் செய்திகள்
உழவரைத்தேடி உழவர் நலத்துறை திட்ட முகாம்
12-Jun-2025
பெண்ணாடம் : பெண்ணாடம் துணை வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் 'உழவரைத் தேடி உழவர் நலத்துறை' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நல்லுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கீதா தலைமை தாங்கி, 'உழவரைத் தேடி உழவர் நலத்துறை' சம்பந்தமான திட்டங்கள் குறித்து பேசினார். விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் நடராஜன், திட்டம் சார்ந்த தொழில்நுட்பம் குறித்து பேசினார். கால்நடை துறை மருத்துவர் காந்தமலை, வேளாண்மை அலுவலர் சரஸ்வதி, விதை சான்று அலுவலர் மகேஷ், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் செந்தில்நாதன் பேசினர். துணை வேளாண்மை அலுவலர் இளங்கோவன், உதவி வேளாண் அலுவலர்கள் பிரியதர்ஷினி, விக்னேஷ், திருவேங்கடம், அட்மா திட்ட அலுவலர்கள் சரவணன், குமரேசன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் ராதிகா, ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, இடுபொருட்கள் வழங்கப்பட்டது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் சவுந்தர்ராஜன் நன்றி கூறினார். இதேப் போன்று, திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை கிராமத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் 'உழவரைத் தேடி உழவர் நலத்துறை' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
12-Jun-2025