மேலும் செய்திகள்
வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்
12-Jul-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன், மா. கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் இளையபெருமாள் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எத்திராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாநில துணை செயலாளர் ஆனந்த ஜோதி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சத்தியவாடி, வேட்டக்குடி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும். சத்தியவாடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
12-Jul-2025