மேலும் செய்திகள்
ரயில்வே கேட் அமைக்க மனு
13-Jul-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே இளங்கியனுார் ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி, சுரங்கப்பாதை அமைக்க, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் எதிரொலியாக கேட் கீப்பர் தங்குவதற்கு ெஷட் அமைக்கப் பட்டுள்ளது. விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார்- பிஞ்சனுார் கிராம இணைப்பு சாலையை, பிஞ்சனுார், வலசை, எடைச்சித்துார், காட்டுப்பரூர், மே மாத்துார், காட்டுப்பரூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையின் குறுக்கே விருத்தாசலம் - சேலம் ரயில்பாதை செல்கிறது. இந்த ரயில்பாதையில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்துதான் தினசரி ரயில்கள் செல்கின்றன. இந்நிலையில், ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி, சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆளில்லா ரயில்வே கேட்டை பொதுமக்கள் யாரும் கடக்க கூடாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. ஆத்திரமடைந்த இளங்கியனுார், பிஞ்சனுார், வலசை, எடைச்சித்துார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 5ம் தேதி ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக, ஆளில்லா ரயில்வே கேட் அருகே, கேட் கீப்பர் தங்குவதற்கு ஏதுவாக ரயில்வே நிர்வாகம் சார்பில் ெஷட் அமைக்கப்பட்டுள்ளது.
13-Jul-2025