மேலும் செய்திகள்
இலவச மனைப்பட்டா கோரி நடுவனந்தல் மக்கள் மனு
09-Sep-2025
கடலுார்: இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு, கடலுார் தாலுகா அலுவலகம் முன் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலுார் புதுவண்டிப்பாளையம் திருவந்திபுரம் ரோட்டில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கூலித்தொழிலாளிகளான இவர்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த இடம் இல்லாததால், தற்காலிக குடியிருப்பை அமைத்து வசிக்கின்றனர். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த 2022, 2023 ஆண்டுகளில் தாசில்தார், கலெக்டர், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பினர். விரைவில் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வீட்டுமனைப்பட்டா கேட்டு கடலுார் தாலுகா அலுவலகம் முன் புதுவண்டிப்பாளையம் மக்கள், குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் கோரிக்கை தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.
09-Sep-2025