உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலா ளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி வரவேற்றார். 890 பேருக்கு தையல் இயந்திரம், விவசாய உபகரணங்கள், வீட்டுமனை பட்டா போன்றவற்றை அமைச்சர் கணேசன் வழங்கினார்.அப்போது, மக்களின் பிரச்னைகளை தீர்க்கவே பணியாற்றி வருகிறோம். மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மனு அளித்தால் அவர்களுக்கும் வாங்கி தருவதே எங்கள் கடமை. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்தவர்களுக்கு 30 நாட்களில் தீர்வு வழங்கியுள்ளோம். எல்லோருக்கும் எல்லாம் என்பதே எங்களது குறிக்கோள் என, அமைச்சர் கணேசேன் பேசினார்.எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் சரண்யா, ஆர்.டி.ஓ.அபிநயா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ